Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மே (ஹி.ச.)
விஜய் விரைவில் ஆட்சி அமைப்பாரென்று கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே சொன்ன விசிறி திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜமால் சாகிப்
மீண்டும் தயாரிக்கும் படம்
பூ காய் கனி
இத்திரைப்படம் 86 காலகட்டத்தில் நடக்கும் ஒரு கிராமத்து காதலை மூன்று பரிணமாக சொல்லும் கதையாகும்.
இத் திரைப்படத்தை
அரும்பு மீசை குறும்பு பார்வை, வெண்ணிலா வீடு,விசிறி, போன்ற படங்களை இயக்கிய.
இயக்குனர் வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்குகிறார்.
இவர் சமீபத்தில் தான் அயலி வெப் தொடர் நட்சத்திரங்களுடன் விஜய் டிவி புகழ் நடித்த சூட்கேஸ் திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
மேலும் தற்போது முழுக்க முழுக்க மண்வாசத்துடன் எழுதி இயக்கும் திரைப்படம்
பூ காய் கனி
தலைப்பிலேயே கவிதை சொல்லும் இயக்குனர் படமும் நிச்சயம் மனதை வருடும்.
சூட்கேஸ் படத்தின் நிர்வாக தயாரிப்பை கவனித்த ராஜேஸ்வரி வெற்றிவீரன்
பூ காய் கனி படத்தை பழையனூர் சந்தனம் பட கம்பெனி சார்பாக தயாரிக்கிறார்
பூ காய் கனி படத்தில் கதையின் நாயகனாக KCP மிதுன் சக்கரவர்த்தி அறிமுகமாகிறார்.
இவர் அடியே வெள்ளழகி,
ஏன் என்னை காதலிச்ச, போன்ற இண்டிபெண்டண்ட் ஆல்பங்களில் நாயகனாக நடித்துள்ளார்.
அதுமட்டும் இன்றி நாயகனுக்கு தேவையான முழு பயிற்சியையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக கதையின் மையக்கருவாக மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்க இருப்பவர்.
உலக அளவில் பல விருதுகளைப் பெற்ற டூலெட் படத்தின் கதை நாயகனான சந்தோஷ் நம்பிராஜன் மலைக்கள்ளன் என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்தவர் மானசி.
இவர் நடிகர் கொட்டாசியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர்,பூ காய் கனி படத்தில் கதைநாயகியாக நடிக்கிறார்.
பூ காய் கனி படத்தின் இயக்குனர் வெற்றிவீரன் மகாலிங்கத்தின் மகனான ராஜூ மகாலிங்கம் ஐந்து வயதிலிருந்து புஷ்பா ,ராயன், ஜவான் போன்ற படங்களில் பின்னணி குரல் கொடுத்தவர்.
அதர்வா நடித்த தனல் படத்தில் வில்லன் அஸ்வினுக்கு மகனாக நடித்தவர்.
பூ காய் கனி படத்தில் நாயகனின் சிறு வயது பாத்திரத்தில் நடிக்கிறார்.
அத்தோடு இன்னும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள்.
மேலும் கூத்துப்பட்டரையில் இருந்து பயிற்சி பெற்ற பத்துக்கும் அதிகமான நடிகர்களும் இந்த படத்தின் மூலமாக அறிமுகமாகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J