ஈழத் தமிழருக்கு விஜய்யின் சேவை தேவை - இலங்கை எம்.பி. அர்ச்சுனா பேச்சு
சென்னை, 16 மே (ஹி.ச.) ஈழத் தமிழர் பிரச்சினைக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குரல் கொடுக்க வேண்டும் என்றும், அவரது சேவை உலகம் முழுவதும் தமிழ் பேசும் மக்களுக்கு தேவை என்றும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். த
அர்ச்சனா


சென்னை, 16 மே (ஹி.ச.)

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குரல் கொடுக்க வேண்டும் என்றும், அவரது சேவை உலகம் முழுவதும் தமிழ் பேசும் மக்களுக்கு தேவை என்றும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வருகை தந்துள்ள அர்ச்சுனா, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது,

எங்கள் இனம் அழியும்போது திமுக, அதிமுக அரசுகள் வேடிக்கை பார்த்தன. சீமான் வாக்கு வாங்க மட்டுமே ஈழத் தமிழர் பிரச்சினையை பேசினார். ஆனால் விஜய்யின் சேவை தமிழ் பேசும் எல்லோருக்கும் தேவை எனக் கூறினார்.

மேலும், ஈழத் தமிழர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு வலுவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியபோது, தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய்க்கு அர்ச்சுனா வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P