Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 16 மே (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது ஒரு கிராமம்.
அந்த கிராமத்தில் உள்ள 17 வயது
சிறுமியின் தாய் மற்றும் தந்தை இருவரும் ஈரோட்டில் கரும்பு வெட்டும் கூலி விலை செய்து வருவதால், சிறுமி தனது பாட்டியான அஞ்சலை வீட்டில் தங்கி படித்து வருகிறார்.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர், தனது பாட்டி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் பெரியசாமி (29) அத்துமீறி வீட்டில் நுழைந்து சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சிறுமியின் பாட்டி அஞ்சலை திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில்,
வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியான பெரியசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN