Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மே (ஹி.ச.)
கடந்த 10ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புதிய அரசு அமைக்கப்பட்ட நிலையில், அன்று முதலமைச்சராக பதவியேற்ற சி. ஜோசப் விஜய் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பொதுத்துறை, பொது நிர்வாகம், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, உள்துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், மகளிர் நலம், இளைஞர் நலம், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற குடிநீர் வழங்கல் துறைகளை தன்னிடம் வைத்துக் கொண்டுள்ளார்.
என். ஆனந்த் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சராகவும், ஆதவ் அர்ஜுனா பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராகவும், கே.ஏ. செங்கோட்டையன் நிதித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
பி. வெங்கடராமணன் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சராகவும், ஆர். நிர்மல்குமார் எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராஜ்மோகன் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும், டாக்டர் டி.கே. பிரபு இயற்கை வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
மேலும், செல்வி எஸ். கீர்த்தனா தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P