Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மே (ஹி.ச.)
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது அலுவலக அறையில் நாற்காலிகளில் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்த ‘துண்டு கலாச்சாரத்திற்கு’ முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலநிலை ஆர்வலர் லிசிபிரியா விடுத்த வேண்டுகோளை ஏற்று அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அரசு அலுவலகங்களில் அமைச்சர்கள், உயரதிகாரிகள் முதல் சாதாரண அதிகாரிகள் வரை நாற்காலிகளில் வெள்ளைத் துண்டுகளை போடும் நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இது அதிகாரத்தின் அடையாளமாக பார்க்கப்படுவதால், இந்த வி.ஐ.பி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என லிசிப்ரியா முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கை விடுக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள், எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்றி முதலமைச்சர் விஜய் தனது நாற்காலியில் இருந்த பாரம்பரிய வெள்ளைத் துண்டை அகற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
முதலமைச்சரின் இந்த எளிமையான நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் சமூக வலைதள பயனர்களிடையே கவனம் ஈர்த்துள்ளதுடன், பலரும் இதனை வரவேற்று பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ