Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 16 மே (ஹி.ச.)
விழுப்புரம்: அதிமுகவில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று பரபரப்பான சூழல் நிலவியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில், மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
அதன்படி, விழுப்புரம் மாவட்ட கழகச் செயலாளராக சமீபத்தில் அதிமுகவில் இருந்து வெளியேறிய இரா. பசுபதி நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் மாவட்ட அலுவலகத்திற்கு வருவதாக தகவல் வெளியானதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை அதிமுக அலுவலகத்திற்கு வந்த சி.வி. சண்முகம் ஆதரவாளர்களை போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.
இதனால் போலீசாருக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
சம்பவத்தை தொடர்ந்து அலுவலகம் சுற்றுவட்டாரத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam