கன்னியாகுமரியில் கொங்கு நாடு உணவுத் திருவிழா 2026 நாளையுடன் நிறைவு
கன்னியாகுமரி, 16 மே (ஹி.ச) தமிழகத்தின் பாரம்பரிய உணவுக் கலாசாரத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், கன்னியாகுமரியில் உள்ள ''ஓட்டல் தமிழ்நாடு'' அமுதகம் உணவகத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் கொங்கு நாடு உணவுத் திருவிழா 2026 நேற்று (மே 15) கோலாகலம
கன்னியாகுமரியில் கொங்கு நாடு உணவுத் திருவிழா 2026 நாளையுடன் நிறைவு


கன்னியாகுமரி, 16 மே (ஹி.ச)

தமிழகத்தின் பாரம்பரிய உணவுக் கலாசாரத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், கன்னியாகுமரியில் உள்ள 'ஓட்டல் தமிழ்நாடு' அமுதகம் உணவகத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் கொங்கு நாடு உணவுத் திருவிழா 2026 நேற்று (மே 15) கோலாகலமாகத் தொடங்கியது.

தமிழகத்தின் தனித்துவமான கொங்கு மண்டல உணவுகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்துவத்தை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் அமுதகம் உணவகங்களில், 'நம் மண், நம் சுவை, நம் பாரம்பரியம்' என்ற கருப்பொருளில் இந்த விழா நடத்தப்படுகிறது.

கடந்த இரு நாட்களாக நடைபெற்று வரும் இவ்விழா நாளையுடன்(மே 17) நிறைவு பெறுகின்றன.

இவ்விழாவில் கொங்கு மண்டலத்தின் இயற்கை மணமும், அசல் சுவையும் மாறாத பாரம்பரிய சமையல் முறைகளில் தயாரிக்கப்பட்ட பல்வேறு அசைவ மற்றும் சைவ உணவுகள் பொதுமக்களுக்குப் பரிமாறப்பட்டன.

இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு புதுவிதமான உணவுகளை சுவைத்து மகிழ்ந்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய உணவு மரபுகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக இந்தத் திருவிழா வடிவமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக இந்த உணவுத் திருவிழா குறித்த மேலதிக விபரங்களுக்கு கன்னியாகுமரி ஓட்டல் தமிழ்நாடு மேலாளரை 9176995850 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b