Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 17 மே (ஹி.ச.)
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொதுக்குழுவை விரைந்து கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன், பொதுக்குழு உறுப்பினர்கள் 1000-க்கும் மேற்பட்டவர்களிடம் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் கையெழுத்து பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் தற்போது சுமார் 2000 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ள நிலையில், கட்சியின் விதிமுறைகளின்படி ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே சிறப்பு பொதுக்குழுவை கூட்ட முடியும் என கூறப்படுகிறது.
இந்த சூழலில், 1000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் கையெழுத்து பெறப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் தோல்வி, கட்சியின் எதிர்கால அரசியல் திட்டம் மற்றும் தலைமைக் கட்டமைப்பு குறித்து விவாதிக்க பொதுக்குழுவை விரைந்து கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், பொதுக்குழுவை கூட்டுவதற்கான அழுத்தத்தை அதிகரித்து, எடப்பாடி கே. பழனிசாமி மீது அரசியல் நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் சி.வி.சண்முகம் அணி நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / GOKILA arumugam