Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 17 மே (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகை அதிகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டத்தை முதல்வர் என். சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
இதன்படி, இனி மாநிலத்தில் மூன்றாவது குழந்தைக்கு ரூ.30 ஆயிரமும், நான்காவது குழந்தைக்கு ரூ.40 ஆயிரமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
‘குழந்தைகளே செல்வம்’ என்ற பெயரில் இந்த புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் நரசன்னபேட்டையில் நடைபெற்ற ‘சுவச்சாந்த்ரா–ஸ்வர்ணாந்த்ரா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர், மக்கள் தொகை குறையும் நிலை கவலைக்குரியதாக உள்ளது என்றார்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு குழந்தைகளே உண்மையான செல்வம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், பல நாடுகளில் மக்கள் தொகை குறைந்து முதியோர் எண்ணிக்கை அதிகரித்ததால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னர் குடும்ப கட்டுப்பாட்டில் கவனம் செலுத்திய நிலையில், தற்போது மாறிய சூழ்நிலைக்கு ஏற்ப மக்கள் தொகையை நாட்டின் வளமாக மாற்ற ‘பாபுலேஷன் மேலாண்மை கொள்கை’ கொண்டு வரப்படுவதாகவும், இதன் மூலம் பிறப்பு விகிதத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தாய்க்கு வந்தனம்’ திட்டத்தின் கீழ் ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாகவும், தாய்-குழந்தைகள் ஊட்டச்சத்திற்காக அங்கன்வாடி மையங்கள் வலுப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA