Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 மே (ஹி.ச)
வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் நிரந்தர சாய்தள வசதிகளை ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவற்றுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்ட பல கட்டிடங்களில் நிரந்தர சாய்தளங்கள் அமைக்கும் பணிகள் முழுமையடையவில்லை என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
மாற்றுத் திறனாளிகள் வாக்குச்சாவடிகளை எளிதில் அணுகும் வகையில் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி மாற்றுத் திறனாளியான வைஷ்ணவி ஜெயகுமார் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, தேர்தல் ஆணையத்தின் இணையதளங்களும் மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் இருப்பதை உறுதி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ