ஆனைமங்கலம் செப்பேடுகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் - ஜோதிமணி வலியுறுத்தல்
சென்னை, 17 மே (ஹி.ச.) தமிழ்நாட்டின் சோழப் பேரரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணமான ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்து அரசால் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பா
Jothimani


Nb


சென்னை, 17 மே (ஹி.ச.)

தமிழ்நாட்டின் சோழப் பேரரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணமான ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்து அரசால் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

பல்வேறு காலகட்டங்களில் தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்குப் பலன் கிடைத்திருப்பதாகவும், இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சோழப் பேரரசின் மத சகிப்புத்தன்மைக்கும், பல்வேறு மத நம்பிக்கைகளை மதிக்கும் பண்பிற்கும் சான்றாக விளங்கும் இந்த செப்பேடுகள் தமிழ்நாட்டின் விலைமதிப்பற்ற சொத்து என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, ஒன்றிய அரசு இந்த செப்பேடுகளை உடனடியாக தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவற்றைப் பெற தமிழ்நாடு அரசு தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்றும் ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், இந்த வரலாற்று ஆவணம் எடுத்துரைக்கும் மத சகிப்புத்தன்மையின் செய்தியை பிரதமர் மோடியும், பாஜகவும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ