சுப்மன் கில் அதிரடி வீண் - குஜராத் அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி
கொல்கத்தா, 17 மே (ஹி.ச.) ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 60-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ்
K


கொல்கத்தா, 17 மே (ஹி.ச.)

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 60-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது.

தொடக்க வீரர் பின் ஆலன் சிறப்பாக விளையாடி 35 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். தொடர்ந்து ரகுவன்ஷி 82 ரன்கள், கேம்ப்ரோன் கிரீன் 52 ரன்கள் எடுத்தனர். இதனால் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் என்ற பெரிய இலக்கை கொல்கத்தா அணி நிர்ணயித்தது.

248 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்கத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. சாய் சுதர்ஷன் 23 ரன்களில் வெளியேற, நிஷாந்த் சிந்து 1 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து கேப்டன் சுப்மன் கில் பொறுப்புடன் விளையாடி 49 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார்.

அவருடன் இணைந்த பட்லர் 57 (35) ரன்கள் எடுத்து அணியின் வெற்றிநம்பிக்கையை உயர்த்தினார்.

பின்னர் மீண்டும் களமிறங்கிய சாய் சுதர்ஷன் 53 (28) ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

எனினும் இலக்கு மிகப்பெரியது என்பதால் குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கொல்கத்தா அணியின் சார்பில் சுனில் நரேன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA