வார விடுமுறையை முன்னிட்டு ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை உயர்வு
ஏற்காடு, 17 மே (ஹி.ச.) கோடை விடுமுறை முன்னிட்டு ஏற்காட்டில் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினமான இன்று சுற்றுலாப் பயணிகள் வருகை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. ஏராளமானவர்கள் தங்களது குடும்பத்தினருட
Increase in Tourist Arrivals in Yercaud


ஏற்காடு, 17 மே (ஹி.ச.)

கோடை விடுமுறை முன்னிட்டு ஏற்காட்டில் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினமான இன்று சுற்றுலாப் பயணிகள் வருகை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

ஏராளமானவர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஏற்காடு வந்து, படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்து உற்சாகமாக பொழுதை கழித்தனர்.

அண்ணா பூங்காவில் மலர் செடிகள், பசுமை புல்வெளிகளில் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடாபாயிண்ட் உள்ளிட்ட காட்சி முனைகளில் இருந்து மலைகளின் அழகையும், சேலம் மாநகரின் காட்சியையும் கண்டு ரசித்தனர்.

குறிப்பாக தாவரவியல் பூங்கா, ஐந்திணை பூங்கா, லேடீஸ் சீட், பக்கோடா பாய்ண்ட் உள்ளிட்ட பகுதிகளை கண்டுகளித்தனர். ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் தள்ளுவண்டி கடைகளில் பஜ்ஜி, காலிபிளவர் சில்லி, பழ வகைகள் விற்பனை களைகட்டியது.

ஓட்டல், ரெஸ்டாரண்டுகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. ஏற்காட்டில் தற்போது இதமான சூழ்நிலை நிலவுவதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளின் வாகன வருகை அதிகமாக இருந்ததால் ஏற்காடு மலைப்பாதையின் 20 கொண்டை ஊசி வளைவுகளிலும், சேலம் முதல் ஏற்காடு மலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து ஊர்ந்து சென்றன. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். முக்கிய சந்திப்புகளில் போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.

அதேபோல சுற்றுலா பயணிகள் பிரபலமான காபி, மிளகு, ஏலக்காய், கைவினைப்பொருட்கள் போன்றவற்றை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

Hindusthan Samachar / vidya.b