ஹனிடிராப் கும்பல் அதிரடி கைது - 5 பேர் சிக்கினர்
பெங்களூரு , 17 மே (ஹி.ச.) பெங்களூரைச் சார்ந்த தொழில் அதிபரின் மகன் (வயது 25) ஒரு பெண் அறிமுகமாகி, அவருடன் நெருங்கிப் பழகியுள்ளார். பின்னர் “உல்லாசமாக இருக்கலாம்” என ஆசை வார்த்தைகள் கூறி, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு
K


பெங்களூரு , 17 மே (ஹி.ச.)

பெங்களூரைச் சார்ந்த

தொழில் அதிபரின் மகன் (வயது 25) ஒரு பெண் அறிமுகமாகி, அவருடன் நெருங்கிப் பழகியுள்ளார்.

பின்னர் “உல்லாசமாக இருக்கலாம்” என ஆசை வார்த்தைகள் கூறி, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அந்த பெண் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, வாலிபரை மிரட்டி, அவருடன் நெருக்கமாக இருப்பது போல புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

பின்னர் அவற்றை காட்டி மிரட்டி, ஹனிடிராப் முறையில் நகை மற்றும் பணத்தை பறித்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட வாலிபர் தாவணகெரே புறநகர் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி,

பஞ்சமி, ஜெகதீஷ், கங்கா மல்லேஷ் நாயக், வெங்கடேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், இவர்கள் பணக்கார வாலிபர்களை குறிவைத்து இதேபோன்ற முறையில் பலரிடம் இருந்து நகை, பணம் பறித்து வந்தது தெரிய வந்தது.

மேலும், பஞ்சமி தான் வாலிபர்களை தொடர்புகொண்டு கவர்ச்சி வார்த்தைகள் கூறி அழைத்து சென்று, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் கண்டுபிடித்தனர்.

நகை–கார் பறிமுதல்

கைதானவர்களிடமிருந்து ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 80 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ஒருவர் கைது

இதுகுறித்து கைதானவர்கள் வழங்கிய தகவலின் பேரில் சுரேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

ஹனிடிராப் கும்பல் பல வாலிபர்களை இதேபோன்று ஏமாற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA