Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 17 மே (ஹி.ச.)
மதுரை கருமாத்தூரில் நாளை காலை நடைபெற உள்ள சேயோன் படத்தின் பூஜையில் கலந்து கொள்வதற்காக மக்கள் நீதி மைய தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
முதல்வர் விஜய் ஆட்சி குறித்த கேள்விக்கு,
ரெண்டு நாள்ல சொல்லக்கூடியது ஜோசியமா தான் இருக்க முடியும். 6 நாள், 15 நாள்லயும் அப்படித்தான் இருக்க முடியும், அவருக்கு ஆறு மாசம் டைம் கொடுக்கக்கூடாதா புதியவர்கள் வந்திருக்காங்க நிறைய பேரு, அதனால புதியவர்கள் வந்து புதுசு கிடையாது அரசியலில், சுதந்திர இந்தியா கிடைச்ச போது எல்லாருமே புதிய அமைச்சர்கள் தான், அதனால புதியவர்களை நம்ம கம்மியாவும் எடை போட வேண்டாம், ரொம்பவும் எதிர்பார்க்கக் கூடாது. என்ன நடக்குமோ அதை பார்த்துட்டு நீங்க தான் ஓட்டு போட்டீங்க, நீங்க தான் அது நல்லபடியா நடக்குதான்றத கவனிக்கணும், நாங்களும் கண்காணிக்கிறோம்.
திராவிட கட்சிகள் இல்லாத ஒரு புதிய ஆட்சி குறித்த கேள்விக்கு,
தமிழ்நாட்டில் இருந்து தமிழ் பேசுற ஒருவர் கட்சி ஆரம்பிச்சா அது பேரு திராவிட கட்சி தான் என்னை பொறுத்தவரைக்கும்.
CBSE-லயுமே மும்மொழி கொள்கை வந்து நிச்சயம் என்று சொல்லி இருப்பது குறித்த கேள்விக்கு,
கம்பல்(compel ) பண்ண முடியுமா தமிழ்நாட்டை? பண்ணி பார்த்திருக்கோம் இல்லையா.
நடிகர் விஜய் ஆட்சிக்கு வந்தது குறித்து பேசும் போது கமல் வெற்றி பெற்றிருந்தால் கூட பொறாமைப்பட்டிருப்பேன் என சிரிப்புடன் ரஜினி கூறியது குறித்த கேள்விக்கு,
சிரிப்போட தான் சொன்னாரே தவிர நாங்க ரெண்டு பேருமே ஒருத்தர் ஒருத்தர் பார்த்து பொறாமைப்பட்டது கிடையாது, போட்டி போடுவோம். ஆனால் பொறாமைப்பட்டது கிடையாது. We are the best sportsman you can find in Tamil Nadu. அது நாங்க சினிமா துறையில் இருக்கோம், நாங்க கிரிக்கெட் விளையாடி இருந்தாலும் இப்படித்தான் இருந்திருக்கும்.
சினிமா குறித்து முதல்வரிடம் கோரிக்கை வைத்தது குறித்த கேள்விக்கு,
அதுதான் இருக்கே. நீங்க படிச்சு கூட பார்க்க மாட்றீங்க. முதல்வர் கிட்ட இருக்கு, பத்திரிக்கையில் உங்கள் நண்பர்களே அதை போட்டிருக்காங்க. திரும்பத் திரும்ப அதையே பேசிக்கிட்டு இருக்கிறதை விட அதுல நல்லது எதுன்னு உங்களுக்கு தோணுதோ, அதை சிறப்பா கோடிட்டுக் காட்ட வேண்டியது உங்க கடமை.
முதல்வர் விஜய் அரசியல் தலைவர்களை சந்தித்தது மற்றும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்த கேள்விக்கு
அதை வரதா பார்க்கிறேன், வேடிக்கை பார்க்கிறேன் என கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN