மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
விழுப்புரம், 17 மே (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் கோவிலில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவி
அம்மன்


விழுப்புரம், 17 மே (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் கோவிலில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடைபெற்று வரும் சிறப்பு வழிபாடுகளின் ஒரு பகுதியாக ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

இதையொட்டி அங்காளம்மன் மலர் அலங்காரம் மற்றும் அபரணங்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சலில் எழுந்தருளினார்.

இதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை மற்றும் பக்தி இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அம்மனை தரிசிக்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டனர்.

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

உற்சவத்தை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

இரவு நேரத்தில் நடைபெற்ற ஊஞ்சல் சேவையை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam