Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 மே (ஹி.ச.)
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களை நேற்று கோடை மழை குளிர்வித்த நிலையில், இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவும் நிலையில், 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என குறிப்பிட்டுள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் கரூர், திருச்சி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.
மழையின் போது இடி மின்னலுடன் 40 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல், அந்தமான் கடல், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகம் வரை சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.
என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P