மெட்ரோ ரயில்களில் புதிய பாதுகாப்பு தொழில்நுட்பம் - இழுவை தடுப்பு அம்சம் அறிமுகம்
சென்னை, 17 மே (ஹி.ச.) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கட்டம்-1இல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இழுவை தடுப்பு அம்சம் ‘Anti-Drag Feature’ என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்ப
Metro


சென்னை, 17 மே (ஹி.ச.)

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கட்டம்-1இல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இழுவை தடுப்பு அம்சம் ‘Anti-Drag Feature’ என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம், புடவை, துப்பட்டா, பை பட்டை உள்ளிட்ட மெல்லிய பொருட்கள் ரயில் கதவுகள் மூடும்போது சிக்கிக்கொண்டால், அதை உடனடியாக கண்டறிந்து பாதுகாப்பு எச்சரிக்கை வழங்கப்படும்.

மேலும், பொருட்கள் கதவுகளில் சிக்கிய நிலையிலேயே ரயில் நகர்வதைத் தடுக்கவும், பயணிகளுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாத வகையில் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த வசதி உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ