மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 79.07 கன அடியாக சரிவு
சேலம், 17 மே (ஹி.ச.) சேலம் மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது குறித்து அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நேற்று 79.16 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 79.07 அடி
Mettur Dam water level drops


சேலம், 17 மே (ஹி.ச.)

சேலம் மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது குறித்து அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நேற்று 79.16 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 79.07 அடியாக குறைந்துள்ளது.

தற்போது அணையின் மொத்த நீர் இருப்பு 41.03 டி.எம்.சி.யாக பதிவாகியுள்ளது.

மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 120 அடியாகும். அதில் தற்போது மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே நீர் உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் சரிந்துள்ளது.

நேற்று வினாடிக்கு 181 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 180 கன அடியாக குறைந்துள்ளது.

அதே சமயம், குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்வரத்தை விட நீர் திறப்பு 5 மடங்கு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

ஆடிப்பட்டத்திற்கான பாசனத்திற்கு மேட்டூர் அணையை நம்பியுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் நீர்மட்டம் தொடர்ந்து குறைவதால் கவலையடைந்துள்ளனர்.

பருவமழை தீவிரமடைந்து கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டால் மட்டுமே மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b