Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 மே (ஹி.ச)
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் மற்றும் திட்டச் செயல்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கீர்த்தனா பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில், அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக “திசை” மற்றும் “உயிர்” திட்டங்கள் மாணவர்களின் கல்வித் திறன், தன்னம்பிக்கை மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவி செய்து வருவதாக பாராட்டப்பட்டது.
மேலும், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை மீண்டும் கல்விப் பாதைக்கு கொண்டு வருவதற்காக ஒவ்வொரு 10 மாணவர்களுக்கும் ஒரு அலுவலரை நியமித்து தனிப்பட்ட வழிகாட்டுதல் வழங்கும் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், மாவட்டத்தின் சில பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படும் நிலை குறித்தும் கூட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
குடிநீர் விநியோகத்தை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ