திருச்சி விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - ராஜஸ்தான் பயணி கைது
திருச்சி, 17 மே (ஹி.ச.) திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய், இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்து விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்திற்க்கு வரும் பயணிகள் அனைவரும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செ
Narcotics Worth Rs 15 Crore Seized at Trichy Airport


திருச்சி, 17 மே (ஹி.ச.)

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய், இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்து விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த விமானத்திற்க்கு வரும் பயணிகள் அனைவரும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த பிறகே வெளியே அனுப்புவது வழக்கம்.

கடந்த சில நாட்களாக விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. மேலும் போதைப்பொருள் மற்றும் உயிரினங்கள் கூட கடத்தி வருவது கடந்த சில சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனை தொடர்ந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில் சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி வந்திறங்கிய அந்தப் பயணியின் உடைமைகளை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர்.

அப்போது, அவரது பயணப் பையில் மிகவும் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த உயர்ரக மெத்தபெட்டமைன் மற்றும் கஞ்சா ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.15 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் துல்லியமான எடை குறித்த விவரங்கள் ரசாயன ஆய்வுக்குப் பின்னரே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என சுங்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முகவராக செயல்பட்டாரா அல்லது கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டாரா என்ற கோணத்தில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கைதான நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் மேலும் சிலர் சிக்கக்கூடும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.இந்த சம்பவம் விமான நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b