Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 17 மே (ஹி.ச.)
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான என்.சி.ஆர். மண்டலத்தில் சி.என்.ஜி. எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம் கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கிலோவுக்கு ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த உயர்வின் காரணமாக, டெல்லியில் சி.என்.ஜி. எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.80.09 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், டெல்லியை ஒட்டியுள்ள நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் சி.என்.ஜி. விலை கிலோவுக்கு ரூ.88.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான இந்த விலை உயர்வுகள், அன்றாடம் வாகனங்களை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் குறிப்பாக கார், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA