Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 மே (ஹி.ச.)
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் காலம் நிலவி வரும் நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், கத்தரி வெயில் தொடங்கும் நிலையில் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர்.
ஆனால் இம்மாதம் 4ஆம் தேதி கத்தரி வெயில் தொடங்கியதிலிருந்தே மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் கடும் வெப்பம் தணிந்து மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, பாடாலூர், டி.களத்தூர் மற்றும் ஆலத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சில இடங்களில் சாரல் மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்ததால் வெப்பம் கணிசமாக குறைந்துள்ளது.
இந்த கோடை மழையால் அக்னி வெயிலின் தாக்கம் முற்றிலும் தணிந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது.
இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam