இடுப்பில் இருந்த 14 கிலோ கட்டி வெற்றிகரமாக அகற்றம்
கோவை, 17 மே (ஹி.ச.) கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளி வடக்கி பாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார் (40). இவரின் இடுப்பின் வலது புறத்தில் கட்டி ஒன்று ஏற்பட்டு, கடந்த 5 ஆண்டு காலங்களில் சுமார் 14 கிலோ எடை வரை வளர்ந்துள்ளது. இதற்கு முறையான சிகிச்சை பெறா
Pollachi Government Hospital


கோவை, 17 மே (ஹி.ச.)

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளி வடக்கி பாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார் (40). இவரின் இடுப்பின் வலது புறத்தில் கட்டி ஒன்று ஏற்பட்டு, கடந்த 5 ஆண்டு காலங்களில் சுமார் 14 கிலோ எடை வரை வளர்ந்துள்ளது.

இதற்கு முறையான சிகிச்சை பெறாமல் அவர் அவதிப்பட்டு வந்த நிலையில், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அதனின் முடிவுகள் அடிப்படையில் அவருக்கு உடடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். கார்த்திகேயன், டாக்டர்.முருகேசன், டாக்டர்.சங்கமித்ரா, பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டனர்.

அதன்படி இந்த குழு சுமார் 4 மணி நேரம் போராடி, 14 கிலோ எடைக்கொண்ட கட்டியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர். தொடர் பரிசோதனைக்கு பிறகு வரும் முடிவின் அடிப்படையில் மேற்கொண்டு தேவைப்படும் சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாகவும், அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவ பயனாளி நலமுடன் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுபோன்ற சிக்கலான மருத்துவ சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் செலவாகும் நிலையில், தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை செய்த மருத்துவ குழுவினர்களுக்கு, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.ராஜா பாராட்டு தெரிவித்தார். மேலும், மருத்துவ பயனாளி மற்றும் அவரது குடும்பத்தினரும் மருத்துவக் குழுக்கு நன்றி தெரிவித்தனர்.

மருத்துவ குழுவினரை கோவை மாவட்டத்தின் இணை இயக்குனர் டாக்டர்.சுமதி பாராட்டினார். இதுகுறித்து பேசிய மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.ராஜா, முதலமைச்சர் காப்பீடு திட்டம் மூலம் அரசு மருத்துவமனையின் இதற்கான பிரிவில் அனுமதிக்கப்பட்டு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், பொது மக்களுக்கு இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு தேவை என்றும் தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN