Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 17 மே (ஹி.ச.)
கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் மே 22ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது.
முகாமில் வங்கி, நிதி, வாகன உற்பத்தி, கட்டுமானம், காப்பீடு, சில்லரை விற்பனை துறை சார்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, காலி பணியிடங்களுக்கேற்ப பணியாட்களை தேர்வு செய்கின்றனர்.
மாவட்டத்தில் 10ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., - பி.டெக்., படிப்பு முடித்த ஆண்கள் பெண்கள் ஆகியோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைதளம் மூலம் பதிவு செய்து முகாமில் பங்கேற்று பயனடையலாம் என அம்மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b