Enter your Email Address to subscribe to our newsletters

சண்டிகர் , 17 மே (ஹி.ச.)
பொதுமக்கள் வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ள நரேந்திர மோடி முதலில் தாமே அதை கடைப்பிடிக்க வேண்டும் என்று பகவந்த் மான் தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாட்டினருக்கு விடுத்த வேண்டுகோளில், பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைத்து, பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என கூறினார்.
மேலும் தேவையற்ற வெளிநாட்டு பயணங்களைத் தவிர்ப்பதன் மூலம் அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்கலாம் என்றும் அறிவுறுத்தினார்.
இதையடுத்து வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி அல்லது கட்டணம் விதிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த தகவல்களை பிரதமர் மோடி மறுத்துள்ளார்.
இந்த நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பிரதமரின் கருத்துக்கு பதிலளித்து,
பொதுமக்களை வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறும் பிரதமர் முதலில் தாமே வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், மக்களை வீட்டிலிருந்து பணியாற்றுங்கள் என்று கூறும் நிலையில், பிரதமரால் ஏன் வீட்டிலிருந்தே பணியாற்ற முடியவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார்.
அத்துடன், உலகின் எங்கோ நடைபெறும் போருக்காக இந்தியாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது ஏன்? என்றும் அவர் விமர்சித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA