விஜய் சுனாமியில் சிக்கியவர்களில் நானும் ஒருவன் -முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
விருதுநகர், 17 மே (ஹி.ச.) விருதுநகரில் உள்ள தனியார் அரங்கில் அதிமுக மேற்கு மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவைத்தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட
ராஜேந்திர


விருதுநகர், 17 மே (ஹி.ச.)

விருதுநகரில் உள்ள தனியார் அரங்கில் அதிமுக மேற்கு மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவைத்தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, 2026 தேர்தல் முடிவுகளை யாரும் எதிர்பார்க்கவில்லை என கூறினார்.

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வந்துள்ளது காலம் தந்த கொடை என்றும், கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் விரிசல்களை தலைமை பார்த்துக் கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

மேலும், விஜய் பெற்ற அனைத்து ஓட்டுகளும் அதிமுகவின் ஆதரவு வாக்குகளே. திமுகவின் வாக்குகள் முழுமையாக திமுகவிற்கே சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதோடு விஜய் எனும் சுனாமியில் சிக்கியவர்களில் நானும் ஒருவன் எனவும் தனது தோல்வி குறித்து வெளிப்படையாக பேசினார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P