Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 17 மே (ஹி.ச.)
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தற்போது தலைமை நீதிபதியுடன் சேர்த்து 34 நீதிபதிகள் உள்ள நிலையில், அந்த எண்ணிக்கையை 38 ஆக உயர்த்துவதற்கான அவசரச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக தீர்க்கவும், நீதிபதிகளின் பணிச்சுமையை குறைக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 1956ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த மாற்றத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
நாடாளுமன்ற அமர்வு நடைபெறாத காலகட்டத்தில், அரசமைப்புச் சட்டத்தின் 123வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளார்.
இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருந்தது.
புதிய பணியிடங்களுக்கான நீதிபதிகளை நியமிக்கும் பணியை உச்சநீதிமன்ற கொலீஜியம் மேற்கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P