Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 மே (ஹி.ச.)
கேரள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 102 இடங்களில் வெற்றி பெற்றது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு இடது சாரி கூட்டணியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.
முதல்வராக விடி சதீசன் முதல்வராக தேர்வு செய்யபட்டுள்ளார்.
இன்று மாலை நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக தேர்வு ஆக உள்ளார்.
இதையடுத்து ஆளுநர் அர்லேகரை சந்தித்து விடி சதீஷன் ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.
ஆளுநர் அழைப்பு விடுத்தததும், முதல்வராக விடி சதீஷன் பதவியேற்க உள்ளார்.
நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள கேரள முதலமைச்சர் பதவியேற்பு விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விழாவில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் பங்கேற்கவுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தென்னிந்திய அரசியல் களத்தில் இந்நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்துள்ள விஜய், அண்டை மாநில அரசியல் நிகழ்வில் பங்கேற்பது தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகள் திருவனந்தபுரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b