திமுக-அதிமுக கூட்டணிக்கு நான் முயற்சிக்கவில்லை - ரஜினிகாந்த் விளக்கம்
சென்னை, 17 மே (ஹி.ச.) சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து அரசியல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்தார். திமுக–அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தானே காரணம் என பரவி வரும் தகவல்கள் குறித்த
A


சென்னை, 17 மே (ஹி.ச.)

சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து அரசியல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்தார்.

திமுக–அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தானே காரணம் என பரவி வரும் தகவல்கள் குறித்து அவர் மறுப்பு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்ததை தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

நான் பதிலளிக்காமல் இருந்தால் அது உண்மையாகி விடும்.

ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தது எனக்கு வருத்தமாக இருந்தது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு அவருக்கும் எனக்கும் 38 முதல் 40 ஆண்டுகளாக நட்பு உள்ளது. அதனால் நட்பு ரீதியாகவே அவரை சந்தித்தேன்.

நான் விஜய் முதல்-அமைச்சராக வராமல் தடுக்க முயன்றேன், இரு பெரிய கட்சிகளை கூட்டணியாக்க பேசினேன் என்றெல்லாம் கூறுவது முற்றிலும் தவறு. அப்படி பேசக்கூடிய தரம்கெட்ட ஆள் இந்த ரஜினிகாந்த் இல்லை.

விஜய் முதல்-அமைச்சராக வருவதில் எனக்கு எந்தப் பொறாமையும் இல்லை. அவர் வெற்றி பெற்றதில் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி உள்ளது.

மக்கள் மாற்றம் வேண்டும் என்று நினைத்த நேரத்தில் விஜய் வந்துள்ளார். அவருக்கு 100 சதவீதம் சினிமா புகழ் கை கொடுத்துள்ளது.

எம்.ஜி.ஆர்.என்.டி.ஆர். ஆகியோரை விட பெரிய வெற்றியை விஜய் பெற்றுள்ளார் என்று பாராட்டு தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA