கள்ளச்சந்தை மதுவிற்பனைக்கு முற்றுப்புள்ளி - 24மணி நேரமும் ரோந்து பணி
சென்னை, 17 மே (ஹி.ச.) தமிழ்நாடு அரசு கள்ளச்சந்தையில் மதுவிற்பனை நடைபெறுவதை முழுமையாக தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மதுபானக் கடைகள் பகல் 12 மணிக்கு முன்னதாகவோ அல்லது இரவு 10 மணிக்கு பின்னரோ ஒரு நிமிடம் கூட
Tasmac Protest


சென்னை, 17 மே (ஹி.ச.)

தமிழ்நாடு அரசு கள்ளச்சந்தையில் மதுவிற்பனை நடைபெறுவதை முழுமையாக தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, மதுபானக் கடைகள் பகல் 12 மணிக்கு முன்னதாகவோ அல்லது இரவு 10 மணிக்கு பின்னரோ ஒரு நிமிடம் கூட திறந்து இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு மண்டலங்களிலும் 24 மணி நேரமும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, கலால் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிய மஃப்டியில் செயல்படும் சிறப்பு ரோந்து குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், பார்-கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மூடப்பட்டதை புகைப்படம் எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கள்ளச்சந்தை மதுவிற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ