திருவனந்தபுரம் – டெல்லி ராஜதானி விரைவு ரயிலில் திடீர் தீவிபத்து
ராஜஸ்தான், 17 மே (ஹி.ச.) திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த ராஜதானி விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகே ரயில் சென்றுகொண்டிருந்தபோது, ரயிலின்
தீ


ராஜஸ்தான், 17 மே (ஹி.ச.)

திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த ராஜதானி விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகே ரயில் சென்றுகொண்டிருந்தபோது, ரயிலின் ஒரு பயணிகள் பெட்டியில் தீப்பற்றி எரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவலின்படி, அதிகாலை நேரத்தில் பயணித்துக் கொண்டிருந்த ரயிலின் ஒரு பெட்டியில் முதலில் புகை வெளியேறியதாக கூறப்படுகிறது.

பின்னர் சில நிமிடங்களிலேயே தீ வேகமாக பரவி, அந்த பெட்டி முழுவதும் தீக்கிரையாகியது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவானது.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

ரயில்வே ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் இணைந்து பயணிகளை அவசரமாக வெளியேற்றினர். பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து தீயணைப்பு படையினர் மற்றும் ரயில்வே மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், சம்பந்தப்பட்ட பயணிகள் பெட்டி முழுமையாக எரிந்து கடுமையாக சேதமடைந்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. மின்கசிவு, மின் சாதன கோளாறு அல்லது தொழில்நுட்ப குறைபாடு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்திலும் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நாட்டின் முக்கிய நீண்ட தூர சொகுசு ரயில்களில் ஒன்றாக கருதப்படும் ராஜதானி விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பயணிகள் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதேவேளை, துரித நடவடிக்கையால் பெரிய உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P