சர்ச்சை பேச்சு - சமாஜ்வாடி தலைவர் ஆசம் கானுக்கு 2 ஆண்டு சிறை
லக்னோ, 17 மே (ஹி.ச.) உத்தர பிரதேச மாநிலத்தில் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பான வழக்கில், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசாம் கான்க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ராம்பூர் தொகுதியில்
U


லக்னோ, 17 மே (ஹி.ச.)

உத்தர பிரதேச மாநிலத்தில் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பான வழக்கில், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசாம் கான்க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஆசம் கான், தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியபோது,

மாவட்ட ஆட்சியர் என்பது சம்பளம் பெறும் அரசு ஊழியர் மட்டுமே; அவரைக் கண்டு மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார்.

மேலும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பயன்படுத்திய காலணிகளை சில உயரதிகாரிகள் சுத்தம் செய்ததாக புகைப்படங்களில் பார்த்ததாக கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக போலீசார் அவர்மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, ராம்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிமன்றம் ஆசம் கானை குற்றவாளி என அறிவித்தது. அதன்படி, அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

தற்போது ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள ஆசம் கானுக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனை காரணமாக, தேர்தல் சட்ட விதிகளின்படி அவரது பதவி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த தீர்ப்பு உத்தர பிரதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA