Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 17 மே (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே முதலியார்சாவடி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற அரசு விரைவுப் பேருந்து, முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் போலீசார் அதனை சரிசெய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P