நடிகர் முத்துக்காளை மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சென்னை, 18 மே (ஹி.ச.) பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதிக்கு (47) சமீபத்தில் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட கடுமையான தொற்று பாதிப்பால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட
நடிகர் முத்துக்காளை மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


சென்னை, 18 மே (ஹி.ச.)

பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதிக்கு (47) சமீபத்தில் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன் பிறகு ஏற்பட்ட கடுமையான தொற்று பாதிப்பால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, கடந்த 17 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுவாசக் கருவியின் (Ventilator) உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், தனது மனைவிக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சை கிடைக்க முதலமைச்சர் விஜய் உதவ வேண்டும் என முத்துக்காளை வீடியோ மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்கள் மூலம் முதல்-அமைச்சர் விஜய்யின் கவனத்திற்குச் சென்ற நிலையில், அமைச்சர் ராஜ்மோகனை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி, அவருக்கு தேவையான அனைத்து அதிநவீன உயர்தர மருத்துவச் சிகிச்சைகளையும் தங்குதடையின்றி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் முத்துக்காளையின் மனைவி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மனைவியின் உடலை பார்த்து கதறி அழுத நடிகர் முத்துக்காளையை அருகில் இருந்தோர் தேற்றினர்.

திரைத்துறையினர் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b