அரூர் அருகே விவசாயி கிணற்றில் சிக்கிய 6 அடி முதலை மீட்பு
தர்மபுரி, 18 மே (ஹி.ச.) தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை அருகே உள்ள விவசாய கிணற்றில் ஆறு அடி நீள முதலையை தீயணைப்பு துறையினர் உதவியுடன் வனத்துறையினர் மீட்டனர். தீர்த்தமலை அருகே உள்ள கீழ்செங்கப்பாடியை சேர்ந்த விவசாயி வெங்கடாசலம் இவருக்
முதலை


தர்மபுரி, 18 மே (ஹி.ச.)

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை அருகே உள்ள விவசாய கிணற்றில் ஆறு

அடி நீள முதலையை தீயணைப்பு துறையினர் உதவியுடன் வனத்துறையினர் மீட்டனர்.

தீர்த்தமலை அருகே உள்ள கீழ்செங்கப்பாடியை சேர்ந்த விவசாயி வெங்கடாசலம்

இவருக்கு சொந்தமான 70 அடி விவசாய கிணற்றில் முதலை இருப்பதை கண்டு

அதிர்ச்சியடைந்தார் இது குறித்து அவர் உடனடியாக தீர்த்தமலை வனச்சரக அலுவலர் கோகுலுக்கு தகவல் தெரிவித்தார்.

வனச்சரக அலுவலர் கோகுல் தலைமையிலான

வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் முதலையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கிணற்றில் தண்ணீர் நிரம்பி இருந்ததால் அவர்களால்

முதலையை மீட்க முடியவில்லை இந்நிலையில் மோட்டார் மூலம் தண்ணீர் முழுவதும்

வெளியேற்றி விட்டு முதலையை உயிருடன் மீட்டனர்.

முதலை ஆறு அடி நீளம் 30 கிலோ எடை

கொண்டதாக இருந்தது தென்பெண்ணையாற்றிலிருந்து 800-மீட்டர் தூரத்தில்

வெங்கடாசலத்தின் கிணறு உள்ளது.

இதை ஒட்டிய சிறு ஓடை ஆற்றுக்கு செல்கிறது சில

மாதங்களுக்கு முன் தீர்த்தமலை பகுதியில் கனமழை பெய்தது அப்போது ஆற்றில்

ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிறு ஓடை வழியாக முதலை அடித்து வரப்பட்டு

கிணற்றுக்குள் விழுந்திருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

தென்பெண்ணை

ஆற்றுப்பகுதியில் தண்ணீர் இருக்கும் இடத்தில் முதலையை பாதுகாப்பாக விடப்படும்

என தெரிவித்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam