வங்கி பெண் ஊழியர் முத்துமாலை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது
திருநெல்வேலி, 18 மே (ஹி.ச.) திருநெல்வேலி பாளையங்கோட்டையில் வங்கி பெண் ஊழியர் முத்துமாலை கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்துமாலை, பாளை தியாகராஜநகர் பகுதியில் தனது மகளுடன்
கைது


திருநெல்வேலி, 18 மே (ஹி.ச.)

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் வங்கி பெண் ஊழியர் முத்துமாலை கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்துமாலை, பாளை தியாகராஜநகர் பகுதியில் தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு, வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், குடும்ப பிரச்சினை மற்றும் பழக்கவழக்கத்தில் ஏற்பட்ட சந்தேகமே கொலைக்கான காரணம் என கண்டறிந்தனர்.

விசாரணையில், முத்துமாலையின் சித்தி மகன் இசக்கிப்பாண்டி, தனது நண்பர் சிவாவுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் ஏற்கனவே இசக்கிப்பாண்டி கைது செய்யப்பட்ட நிலையில், இன்று பன்னீர்செல்வம் மற்றும் சிவா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், “நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் வெட்டிக்கொலை செய்தேன்” என பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநகர காவல் ஆணையாளர் சஞ்சய் தேஷ்முக் உத்தரவின் பேரில் தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam