அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை - துறை வாரியான பணிகள் குறித்து முக்கிய விவாதம்
சென்னை, 18 மே (ஹி.ச.) சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். சமீபத்தில் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு துறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய பணிகள், மக்கள் நலத் திட்டங்கள் மற்று
விஜய்


சென்னை, 18 மே (ஹி.ச.)

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

சமீபத்தில் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு துறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய பணிகள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

குறிப்பாக, துறைகளின் செயல்திறனை அதிகரித்தல், மக்கள் குறைகளை விரைவாக தீர்த்தல் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவது தொடர்பாக அமைச்சர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அமைச்சர்கள் தங்கள் துறைகளில் உடனடி ஆய்வு கூட்டங்களை நடத்தி, நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முக்கிய ஆலோசனை கூட்டங்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam