இன்ஸ்டாகிராம் மூலமாகதான் தவெக ஆட்சிக்கு வந்துள்ளது - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தஞ்சாவூர், 18 மே (ஹி.ச.) திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களே இன்னும் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளதால், “திமுகதான் தமிழகத்தை ஆள்கிறது” என தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் தி.மு.க. எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணனின் இல்லத் திருமண விழாவில் தி.மு
மு.க.ஸ்டாலின்


தஞ்சாவூர், 18 மே (ஹி.ச.)

திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களே இன்னும் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளதால், “திமுகதான் தமிழகத்தை ஆள்கிறது” என தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் தி.மு.க. எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணனின் இல்லத் திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:

மக்களுக்காக கொண்டு வந்த திட்டங்கள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன. அந்த திட்டங்கள் இருக்கும் வரை திமுக அரசின் தாக்கமும் மக்களிடையே நீடிக்கும் என்று கூறினார்.

மேலும், எந்த பெரிய பணிகளையும் செய்யாமல் தவெக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது. சமூக வலைதளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலமாகவே அந்த வெற்றி கிடைத்துள்ளது என்றும் விமர்சித்தார்.

2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்த பின்னரும், மக்கள் மத்தியில் திமுகவின் ஆதரவு தொடர்கிறது என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam