முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை - வானதி சீனிவாசன்
சென்னை, 18 மே (ஹி.ச.) இலங்கை ஈழப் போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவு நாளை முன்னிட்டு, பாஜக தேசிய மகளிரணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் த
Vanathi


சென்னை, 18 மே (ஹி.ச.)

இலங்கை ஈழப் போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவு நாளை முன்னிட்டு, பாஜக தேசிய மகளிரணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

மே 18 என்பது இலங்கை ஈழ யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்ற கருப்பு தினம். உலக வரலாற்றில் ஒரே நாளில் நடைபெற்ற மிகப்பெரிய இனப்படுகொலையாக முள்ளிவாய்க்கால் சம்பவம் பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த கொடூர சம்பவத்திற்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஈழத் தமிழர்களின் வரலாற்றில் அழியாத காயமாக பதிந்துள்ள அந்த சம்பவத்தின் போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் திமுக ஆகியவை மௌனமாக இருந்தன. அந்த நாள், ஈழத் தமிழர்களுக்கு காங்கிரஸ்-திமுக செய்த துரோகத்தின் நாளாக வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கு தனது ஆழ்ந்த அஞ்சலியையும் வீர வணக்கங்களையும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ