Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 மே (ஹி.ச.)
கேரள மாநிலத்தின் முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.டி.சதீசன் இன்று பதவியேற்றார். அவருடன் 20 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
இந்த விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கேரள மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், கேரள மாநில பாஜக எம்எல்ஏ ராஜீவ் சந்திரசேகர், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள், ஆளும் காங்கிரஸ் கூட்டணி கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் கேரள முதல்வராக இன்று பதவியேற்ற வி.டி.சதீசனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் இன்று அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,
ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகளின் சார்பில் இன்று கேரளத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் திருமிகு. சதீஷன்
அவர்களுக்கு எனது சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b