Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 18 மே (ஹி.ச.)
சென்னை முடிச்சூர் வரதராஜபுரத்தைச் சேர்ந்த பரத் மற்றும் சீனு என்ற கானா பாடகர்கள், துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு படப்பையில் நண்பர் வீட்டில் தங்கியிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஆறுபேர் கும்பலால் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பதிவில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவரது பதிவில்,
ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதுபோல் இந்த காவல்துறை தற்போது சரியான மேய்ப்பன் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தை ஆளும் பொய்க்கால் குதிரை அரசு இரண்டு இளைஞர்களை வெட்டிக் கொன்றுள்ள போதை ஆசாமிகளை உடனடியாக கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ