மே 21 ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தூத்துக்குடி, 18 மே (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், பாசன வசதிகள் மற்றும் வேளாண் சார்ந்த கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு, 2026 மே மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்’ வரும் 21-05-20
மே 21 ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


தூத்துக்குடி, 18 மே (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், பாசன வசதிகள் மற்றும் வேளாண் சார்ந்த கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு, 2026 மே மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்’ வரும் 21-05-2026 (வியாழக்கிழமை) அன்று காலை 10:00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரே இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி, விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கோரிக்கை மனுக்களைப் பெற்று விசாரணை நடத்த உள்ளார்.

மேலும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை (நீர்வரத்து) மற்றும் மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் முதன்மை அதிகாரிகளும் இக்கூட்டத்தில் நேரில் பங்கேற்கின்றனர்.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயப் பெருமக்கள், உழவர் சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் இக்கூட்டத்தில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு, தங்கள் பகுதி விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகள், பயிர்ச் சாகுபடி தேவைகள் மற்றும் பாசனக் கால்வாய் முறையீடுகள் குறித்த கோரிக்கைகளைத் தெரிவித்துப் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b