Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 18 மே (ஹி.ச.)
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 62-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 12 ரன்களில் அவுட்டானார்.
பின்னர் துரு ஜுரல் மற்றும் சூர்யவன்ஷி இணைந்து அணியை முன்னேற்றினர்.
சூர்யவன்ஷி 21 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ரியான் பராக் அரைசதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜுரேல் 53 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அன்றிச் மற்றும் திவாரி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
194 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு கே எல் ராகுல் மற்றும் அபிஷேக் போரல் நல்ல தொடக்கம் அளித்தனர். அபிஷேக் போரல் 29 பந்துகளில் அரைசதம் அடித்து 51 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் கே.எல்.ராகுலுடன் சாஹில் பராக் இணைந்தார். ஸ்டப்ஸ் 4 ரன்களிலும், டேவிட் மில்லர் 9 ரன்களிலும் அவுட்டானார்கள்.
இறுதியில் அக்சர் பட்டேல் மற்றும் அசுடோஸ் சர்மா இணைந்து அதிரடி ஆட்டம் வெளிப்படுத்தினர். அசுடோஸ் சர்மா 5 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். அக்சர் படேல் 18 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.
இதனால் டெல்லி அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. ராஜஸ்தான் தரப்பில் ஆச்சர் மற்றும் பிரிஜேஸ் சர்மா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதன்மூலம் ராஜஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிகரமாக வீழ்த்தியது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA