முதலமைச்சர் ஜோசப் விஜயை சந்தித்த FICCI பிரதிநிதிகள் குழு
சென்னை, 18 மே (ஹி.ச.) தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கங்களின் கூட்டமைப்பான இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FICCI) பிரதிநிதிகள் குழுவினர் சந்த
Cm


சென்னை, 18 மே (ஹி.ச.)

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கங்களின் கூட்டமைப்பான இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FICCI) பிரதிநிதிகள் குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சி நோக்கத்திற்கிணங்க, மாநிலத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் புதிய முதலீடுகளை விரைவுபடுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது, தமிழ்நாட்டின் தொழில்துறை முன்னேற்றத்தில் ஃபிக்கி வழங்கி வரும் பங்களிப்பை முதலமைச்சர் பாராட்டினார். மேலும், ஃபிக்கி பிரதிநிதிகள் முன்வைத்த கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் அனைத்தும் கவனமாக பரிசீலிக்கப்பட்டு, அவற்றிற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டை நாட்டின் முன்னணி பொருளாதார சக்தியாக உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பயணத்தில், ஃபிக்கி போன்ற தொழில் அமைப்புகளின் வழிகாட்டுதலும், பரிந்துரைகளும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பில், ஃபிக்கி தமிழ்நாடு மாநிலக் கவுன்சில் சேர்மன் திரு. ஜி.எஸ்.கே. வேலு, இணைத் தலைவர்கள் திரு. பூபேஷ் நாகராஜன், டாக்டர் அசோக் வர்கீஸ், ஃபிக்கி தமிழ்நாடு மாநிலக் கவுன்சில் தலைவர் தஆர். சுதர்சன் மற்றும் ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்தின் வெளிவிவகாரங்கள் தலைவர் திரு. ஸ்ரீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / P YUVARAJ