பசு மாட்டுடன் தகாத உறவு- வாலிபரை தேடும் போலீசார்
பெங்களூரு , 18 மே (ஹி.ச.) கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள காட்டன் பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் அருவருப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட வாலிபரின் செயல் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, அந்த வீடியோ ச
K


பெங்களூரு , 18 மே (ஹி.ச.)

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள காட்டன் பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் அருவருப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட வாலிபரின் செயல் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அப்பகுதியில் வசித்து வரும் ஒருவர் தனது பசு மாட்டை சாலையோரத்தில் கட்டி வைத்திருந்தார். இந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், அங்கு யாரும் இல்லாததை உறுதி செய்து கொண்டு, பசு மாட்டுடன் தகாத செயலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் முழுவதும் பதிவாகியுள்ளது.

பின்னர் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

இதுகுறித்து காட்டன் பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதில் வாலிபரின் உருவம் மற்றும் மோட்டார் சைக்கிளின் பதிவு எண் தெளிவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA