Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு , 18 மே (ஹி.ச.)
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக மக்கள் செலவுகளை குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதில், ஒரு ஆண்டுக்கு தங்க நகைகள் வாங்குவதை தவிர்க்குமாறும், சொந்த வாகனங்களை பயன்படுத்துவதை குறைத்து பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்தவும் அறிவுறுத்தினார்.
பிரதமரின் இந்த கோரிக்கைக்கு பா.ஜனதா கட்சியினர் ஆதரவு தெரிவித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் எதிரொலியாக, பெங்களூருவில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்கும் ஆர்வம் சுமார் 50 சதவீதம் அளவில் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், பொதுப் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்துவதால், ஒவ்வொரு பெட்ரோல் விற்பனை நிலையத்திலும் தினசரி 150 முதல் 250 லிட்டர் வரை பெட்ரோல், டீசல் மிச்சமாகின்றது என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த தகவல்கள் குறித்து நகைக்கடை உரிமையாளர்கள் அல்லது தங்க நகை வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA