சூர்யா நடிக்கும் கருப்பு – திரை விமர்சனம்...!
சென்னை , 18 மே (ஹி.ச.) ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா,திரிஷா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கருப்பு இத் திரைப்படத்தில்நட்டி நடராஜ்,ஆர் ஜே பாலாஜி , சுவாஸ்திகா,தீபா,மாறன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை களம் : கடவுளே வந்தாலும் மாற்ற முடியாத
K


சென்னை , 18 மே (ஹி.ச.)

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா,திரிஷா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கருப்பு

இத் திரைப்படத்தில்நட்டி நடராஜ்,ஆர் ஜே பாலாஜி , சுவாஸ்திகா,தீபா,மாறன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை களம் :

கடவுளே வந்தாலும் மாற்ற முடியாத விஷயத்தை, மனிதன் மாற்ற முடியுமா? என்ற சிந்தனையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘கருப்பு’

பிரபல வழக்கறிஞராக இருக்கும் ஆர்.ஜே. பாலாஜி, லஞ்சம் மற்றும் அதிகாரம் மூலம் நீதித்துறையையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.

சட்டவிரோத நடவடிக்கைகள் முதல் கட்டப்பஞ்சாயத்து வரை அனைத்தையும் அவர் ஆதிக்கத்தில் நடத்துகிறார்.

இந்த நிலையில், மக்களின் வேதனையை கேட்டு, கருப்புசாமியாக சூர்யா மனித உருவில் வந்து அவரை எதிர்கொள்கிறார்.

கடவுளாக அல்லாமல், மனிதராக இருந்து மாற்றம் கொண்டு வாருங்கள் என்ற சவாலை ஏற்றுக்கொண்டு, அவர் மனிதராக போராட ஆரம்பிக்கிறார்.

அந்த போரட்டத்தில் நீதித்துறையின் ஊழலை எதிர்த்து அவர் வெற்றி பெறுகிறாரா?என்பதே படத்தின் மையம்.

ஆர்.ஜே. பாலாஜி

வில்லத்தனமான வழக்கறிஞராக மாஸ் காட்சிகளுடன் களமிறங்கி, படத்தின் முழு ஓட்டத்தையும் தன்னுடைய நடிப்பால் தாங்குகிறார்.

சூர்யா

கருப்புசாமியாக ஆக்ரோஷம், மனிதராக உணர்ச்சி — இரண்டையும் சமநிலையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக நீதியை பேசும் காட்சிகள் ஜெய் பீம் படத்தை நினைவுபடுத்தும்.

திரிஷா

திரிஷா கதையில் இருந்தாலும், அவரின் பாத்திரம் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

நட்டி நடராஜ், இந்திரன்ஸ்

இவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களை நன்றாக செய்துள்ளனர்.

தொழில்நுட்பம் :

ஒளிப்பதிவு பிரமாண்டமாக இருந்தாலும், சில காட்சிகளில் அதிக ஒளி மற்றும் சிவப்பு டோன் கண்களுக்கு சோர்வை ஏற்படுத்துகிறது.

சண்டைக் காட்சிகளில் அதிக கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டதால் இயல்புத்தன்மை குறைகிறது.

இசை மற்றும் பின்னணி இசை பல இடங்களில் உரையாடல்களை மூழ்கடிக்கிறது.

இயக்கம்:

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, நீதித்துறையில் உள்ள ஊழல் மற்றும் அநீதியை நேரடியாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், கடவுள் கோணத்தை விட மனிதர்களின் போராட்டத்தை மையமாக வைத்து கதை சொல்லியிருந்தால், படம் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்.

மொத்தத்தில்

‘கருப்பு’ — சமூக கருத்தை முன்வைக்கும் முயற்சி.

நடிப்பு மற்றும் கருத்து பலம் இருந்தாலும், திரைக்கதை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் முழுமையாக ஒத்துழைக்கவில்லை.

👉 மதிப்பெண்: 2.75 / 5

Hindusthan Samachar / M.DEEPAK RAJA