கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வில் முழுமையான வட்டப்பானை கண்டெடுப்பு
சிவகங்கை, 18 மே (ஹி.ச.) தமிழகத்தின் பழமையான வைகைக்கரை நாகரிகத்தை வெளிக்கொண்டுவரும் வகையில், மாநில தொல்லியல் துறை சார்பில் கீழடி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 11-ஆம் கட
Keezhadi


சிவகங்கை, 18 மே (ஹி.ச.)

தமிழகத்தின் பழமையான வைகைக்கரை நாகரிகத்தை வெளிக்கொண்டுவரும் வகையில், மாநில தொல்லியல் துறை சார்பில் கீழடி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 11-ஆம் கட்ட அகழாய்வில் எவ்வித சேதமும் இன்றி முழுமையான வடிவில் ஒரு சிறிய அளவிலான வட்டப்பானை தற்போதைய அகழாய்வுக் குழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முழுமையான பானையின் அருகிலேயே சேதமடைந்த சாயக் கிண்ணங்கள், கருப்பு நிறப் பானைகள், இருவண்ணப் பானைகள் மற்றும் வாய் அகன்ற சுடுமண் பாத்திரங்களும் கிடைத்துள்ளன.

இங்கு கிடைத்து வரும் செங்கல் சுவர்கள் மற்றும் கட்டிட அமைப்புகள், கீழடி நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையான ஒரு திட்டமிடப்பட்ட நகரக் கட்டமைப்பைக் கொண்டிருந்ததை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

இதற்கு முந்தைய 7-ஆம் கட்ட அகழாய்விலும் பெரிய அளவிலான சிவப்பு நிறப் பானை ஒன்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது கிடைத்துள்ள இந்த முழுமையான வட்டப்பானை தமிழர்களின் பழங்கால மண்பாண்டக் கலை மற்றும் வாழ்வியலை மேலும் விரிவாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.

Hindusthan Samachar / ANANDHAN