விசாரணை கைதிகள் விவகாரம் - போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவு
திருவனந்தபுரம் , 18 மே (ஹி.ச.) கேரள மாநிலத்தில் போலீஸ் நிலைய சிறைகளில் வைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகள் உள்ளாடைகள் மட்டும் அணிய அனுமதிக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமைகள் ஆண
K


திருவனந்தபுரம் , 18 மே (ஹி.ச.)

கேரள மாநிலத்தில் போலீஸ் நிலைய சிறைகளில் வைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகள் உள்ளாடைகள் மட்டும் அணிய அனுமதிக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அமரவிளா பகுதியைச் சேர்ந்த லெனின் ராஜ் தாக்கல் செய்த மனுவில், விசாரணை கைதிகளை உள்ளாடைகள் மட்டுமே அணிய கட்டாயப்படுத்துவது மனித உரிமை மீறல் என்றும், இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம், காவல்துறையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு முறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை போலீஸ் டி.ஜி.பி. உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், விசாரணை கைதிகள் உள்ளாடைகள் மட்டுமே அணிய அனுமதிக்கும் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இந்த உத்தரவை மனித உரிமைகள் ஆணைய தலைவர் மற்றும் நீதிபதியான அலெக்சாண்டர் தாமஸ் பிறப்பித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA